நாம் தகவல்களை சேமிக்க கணணியில் பல்வேறு வகைப்பட்ட போர்மட்டுடைய கோப்புகளை பயன்படுத்துகின்றோம்.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் கோப்பைக் குறிக்கிறது. இந்த வகை கோப்பை போர்மட்டிங் விஷயங்கள் இருக்காது, எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் போர்மட் என அழைக்கப்படும் இந்த வகை கோப்புகளில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் போர்மட்டிங் இருக்கும். போர்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து கோப்பைத் திறக்கலாம்.