கணணியில் உள்ள தகவல்களை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்து கொள்ள நாம் பெரிதும் பயன்படுத்துவது கோப்பறை(Folder) ஆகும்.
இந்த கோப்பறைகளை நாம் எளிதில் உருவாக்க முடியும். புதிதாக கணணியை பற்றி கற்றுக்கொள்ளும் போது இந்த கோப்பறை உருவாக்கத்தினை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இவ்வாறு உருவாக்கும் கோப்பறைகளை நாம் முறையாக பராமரிப்பது இல்லை. எதற்காக உருவாக்கினோம் என்று கூட தெரியாமல் நம் கணணியில் பல்வேறு கோப்பறைகள் இருக்கும்.
ஆனால் அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் வெற்று கோப்பறைகள் பல நம் கணணியில் இருக்கும். இதனால் நம் கணணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் நாம் எதாவது ஒரு கோப்பினை தேடும் போது ஒவ்வொரு கோப்பறையாகதான் சென்று தேட வேண்டும்.
அவ்வாறு தேடும் போது இந்த வெற்று கோப்பறைகள் நமக்கு எரிச்சலை உண்டாக்கும். இவ்வாறு இருக்கும் வெற்று கோப்பறைகளை நாம் ஒவ்வொன்றாக தேடி நீக்க வேண்டும் என்றாலும் அதுவும் சலுப்பூட்ட கூடிய விஷயம் தான் ஆனால் இதுபோன்ற வெற்று கோப்பறைகளை அழிக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Open Folder என்னும் பொத்தானை அழுத்தி எந்த ட்ரைவினை(C: D: E: ) குறிப்பிட்டு ஒகே செய்யவும்.
சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு வெற்று கோப்பறைகள் பட்டியலிடப்படும். அதை தேர்வு செய்து Delete Checked From Disk என்னும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும்.
இதே முறையை பின்பற்றி கணணியில் உள்ள அனைத்து வெற்று கோப்பறைகளையும் நீக்கி கொள்ள முடியும். இதன் மூலம் மேலும் உங்கள் கணணியை நீங்கல் அழகுபடுத்த முடியும்
Download
கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளை அழிப்பதற்கு (2)
பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணணியில் பல வெற்று கோப்பறைகள்(Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும்.
கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளை அழிப்பதற்கு (2)
பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணணியில் பல வெற்று கோப்பறைகள்(Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும்.
இவை கணணியின் வன்தட்டில் பல இடங்களில் இருக்கலாம். கணணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று கோப்பறைகள் அழிக்காமலே விடப்படுகின்றன.
சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.
கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளைத் தேடவும் அதனை உடனடியாக அழிக்கவும் உதவுகின்ற ஒரு மென்பொருள் தான் RED(Remove Empty Directories). இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
இதனை நிறுவிய பின்னர் தேவையான டிரைவைத் தேர்ந்தெடுத்து Scan Drive என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் குறிப்பிட்ட டிரைவில் உள்ள வெற்று கோப்பறைகள் எல்லாமே பட்டியலிடப்படும். Delete பட்டனைக் கொடுத்தால் அனைத்து கோப்பறைகளும் அழிந்துவிடும்.
அழிக்கப்படும் கோப்பறைகள் Recycle binக்கே செல்லும். அடுத்ததாக Empty Recycle bin கொடுத்தால் கணணியிலிருந்தே நீக்கப்படும். இதன் Settings பகுதியில் நேரடியாக நீக்குவது, Hidden Folder களைச் சோதித்தல், எந்த மாதிரி கோப்பறைகளை நீக்கக் கூடாது போன்ற அமைப்புகளைக் கையாள முடியும்.
இம்மென்பொருளின் ஒரே குறை என்னவென்றால் தேவைப்பட்ட கோப்பறைகளைத் தேர்வு செய்து அழிக்க முடியாது. எல்லா வெற்று கோப்பறைகளுமே ஒரே கிளிக்கில் அழிக்கப்படும். அதனால் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் டிரைவ்/சி டிரைவ் (C Drive) பகுதியைச் சோதிப்பதைத் தவிர்ப்பது நலம்.
Download
No comments:
Post a Comment