flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label Files. Show all posts
Showing posts with label Files. Show all posts

Nov 13, 2011

கோப்புகளின் வகைகள்


நாம் தகவல்களை சேமிக்க கணணியில் பல்வேறு வகைப்பட்ட போர்மட்டுடைய கோப்புகளை பயன்படுத்துகின்றோம்.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் கோப்பைக் குறிக்கிறது. இந்த வகை கோப்பை போர்மட்டிங் விஷயங்கள் இருக்காது, எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் போர்மட் என அழைக்கப்படும் இந்த வகை கோப்புகளில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் போர்மட்டிங் இருக்கும். போர்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து கோப்பைத் திறக்கலாம்.