flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Showing posts with label BIOS. Show all posts
Showing posts with label BIOS. Show all posts

May 2, 2011

BIOS - பயோஸ்


கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System என்பதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் புரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ராம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும்.