கணணியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம்.
பிடித்தால் அந்த மென்பொருள்களை பயன்படுத்துவோம். இல்லையெனில் கணணியிலிருந்து நீக்கி விடுவோம். இவ்வாறு கணணியில் இருந்து நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணணியை விட்டு நீங்காது.
ஒரு சில கோப்புக்கள் கணணியிலேயே தங்கி விடும். மேலும் கணணியை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணணியில் தேவையற்ற குப்பைகளை சேமிக்கும். அதுவும் கணணியிலேயே தங்கி விடும்.