flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 1, 2011

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.infஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள் , அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும், இவ்வரான அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft  நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory  யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......



தலைப்பிற்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என யோசிக்கிரீங்களா? இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R)  திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் Systemஎன்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay  என்பதற்கு கீழுள்ள Enabled 

        என்பதையும்  Turnoff Autoplay on இல் All drives தெரிவுசெய்யுங்கள்

05. இப்பொழுு நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும்  வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?


எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R)  திறந்து drive வின் எழுத்தை  கீழுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து  ok பட்டனை அழுத்துங்கள். 

இவ்வாறு open செய்யிம்போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம்.



Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?



இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில்

உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய



எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் 


எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )


இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.




[autorun] 


open=autorun.exe


icon=autorun.ico




Autorun இது என்ன வைரஸா ?




நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு


டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.


பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்


கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை

சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.





இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,




1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .


2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.




Registry Disabled,



Task manager Disabled,



Enable Folders options




Enable run




Enable command prompt




மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)


தடுக்கிறது.




3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.


4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது

( Write -protect)




இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.


இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்


மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை


பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!







தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )


No comments:

Post a Comment