நமது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற அனைத்திலும் தகவல் சேகரித்து வைத்திருப்போம். அவை திருடு போகாமல் இருப்பதற்காக் பாஸ்வேர்ட்(Pass word) பயன்படுத்தி கம்ப்யூட்டரை லாக்(Lock) செய்திருப்போம்.
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பென்-டிரைவினை(Pen drive) உபயோகித்து நமது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை லாக்(Lock) செய்யவும், அன்லாக்(UnLock) செய்யவும் இயலும்.
இதற்காக Predator என்னும் மென்பொருளினை பயன்படுத்தி பென்-டிரைவ் மூலமாக லாக் மற்றும் அன்லாக் செய்ய இயலும். இதன் மூலமாக மற்றவர்களால் கம்ப்யூட்டரை மற்றவர்களால் பயன்படுத்த இயலாது.
பயன்படுத்தும் முறை
- முதலில் Predator என்னும் மென்பொருளினை(Software) தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
- மென்பொருளை தரவிறக்கம் செய்ததும், பென்-டிரைவ் ஐ கம்ப்யூட்டரில் இணைக்கவேண்டும். புதிய பாஸ்வேர்ட்டினை பதிவதற்காக கேட்கும். இதில் பென்-டிரைவில் நாம் பதிந்து வைத்திருக்கும் மற்ற தகவல்களோ அல்லது பைல்களோ அழியாது.
- அடுத்ததாக, பாஸ்வேர்டை பதிவதற்கான பக்கத்தில் Prefrence Window- Enter new password கொடுக்க வேண்டும். ஒருவேளை பென் –டிரைவ் தொலைந்துவிட்டாலோ அல்லது காரஃப்ட் ஆகி விட்டாலோ இந்த பாஸ்வேர்டானது கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய உதவும். இந்த வசதிக்காக USB Flash Drive –ல் Create key – Ok கொடுக்கவேண்டும்.
- Predator ஐ தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டும். இதற்கு பின் உங்கள் கம்ப்யூட்டரானது ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் பென் –டிரைவ் உள்ளதா என சரிபார்க்கும். இல்லையெனில் கம்ப்யூட்டர் ஆனது Log off ஆகிவிடும்.
Predator-ல் உள்ள Pause monitoring தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலமாக பென் –டிரைவ் மூலமாக கம்ப்யூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தினால் அறிய இயலும்.
No comments:
Post a Comment