கூகுள் நிறுவனம் இணைய சேவையினைத் தாண்டி பல்வேறு ஒன்லைன் சேவைகளையும் வழங்கி வருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது மற்றுமொரு புதிய சேவையினையும் அறிமுகம் செய்துள்ளது.
AutoDraw எனும் இச் சேவையின் ஊடாக உங்களது டூடுல்களை கிளிப் ஆர்ட் ஆக மாற்றக்கொள்ள முடியும்.
இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச் சேவைக்காக https://www.autodraw.com/ எனும் இணையப் பக்கத்தினை கூகுள் உருவாக்கியுள்ளது.
மேலும் இதில் தரப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் இலகுவாக டூடுல்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
கணினிகள் அல்லது மொபைல் சாதனங்களில் அப்பிளிக்கேஷன்களை நிறுவி இவ்வாறு டூடுல்களை உருவாக்கும்போது சில சமயங்களில் அச் சாதனங்களின் செயற்பாட்டு வேகம் குறையும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதனைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒன்லைன் சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
No comments:
Post a Comment