flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 3, 2011

எவ்வாறு System State data வினை பேக்அப் செய்வது?


இன்றைய நிலையில் பெரும்பான்மையனவரால் பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும், இதற்கு பிறகு விஸ்டா,7 போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள்  மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளிட்டிருந்தாலும் இன்றும் அனைவராலும் விரும்பி பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும். ஏனெனில் இதன் எளிமை தான், மேலும் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் எந்த ஒரு நிலையிலும் இயங்க கூடியது ஆகும். நாம் எதாவது சிஸ்டம்  Registry  மாற்றம் செய்யும் போது எதாவது பிரச்சினை எலும், அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க System State data வினை பேக்அப் எடுத்துகொள்வது நல்லது பேக்அப் செய்ய.

முதலில் Start button> All programs> Accessories> System Tools என்பதை தேர்வு செய்யவும். அதில் Backup என்பதை தேர்வு செய்யவும்.




 பின் தோன்றும் பேக்அப் விண்டோவில் Advanced mode என்பதை தேர்வு செய்யவும்.


பிறகு தோன்றும் "Backup Utility" விண்டோவில் Backup Wizard [Advanced] என்பதை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் "Only back up the System State date" என்பதை  தேர்வு செய்து NEXT என்ற பொத்தானை அழுத்தவும்.



அடுத்து பேக்அப் செய்ய வேண்டிய தேர்வு செய்துவிட்டு NEXT என்ற பொத்தானை அழுத்தியவுடன், Backup process தொடங்கும். 



இனி எந்த ஒரு பயமும் இல்லாமல் செயல்பட முடியும், இது WINDOWS REGISTRY,WINDOWS BOOTFILES,COM+CLASS REGISTRATION DATABASE போன்ற பைல்களை பேக்அப் செய்யகூடியது ஆகும்.

No comments:

Post a Comment