கணணி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை சார்ந்தே உள்ளது. இதற்கு காரணம் கணணி பயனாளர்கள் பெருமளவில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதே காரணம் ஆகும். இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்யும் வசதி இல்லை. பொதுவாக பயனர் கணக்கு துவங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும். அந்த கணணியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணணிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணணிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம். சில நேரங்களில் ஓபரேட்டிங் சிஸ்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம்.
அதுபோன்று ஓபரேட்டிங் சிஸ்டத்தினை லாக் செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது போர்டபிள் அப்ளிகேஷன் ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளடவும். கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் எந்த போர்மட்டில் இயங்குதளத்தை லாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் லாக் செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது லாக் செய்யப்படும். நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை லாக் செய்தால் கடவுச்சொல் இட்டால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். USB மூலமாக லாக் செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்வதன் மூலமாக பிறர் நமது கணணியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே லாக் செய்ய முடியும். |
No comments:
Post a Comment