ஐஎஸ்ஒ(ISO) கோப்புக்களை நாம் போர்ட்டபிள் கோப்புக்களாக மாற்றிய பின்பு தான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ கோப்புகளின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் கோப்பாக மாற்றிய பின்புதான் முடியும்.
நேரடியாக ஐஎஸ்ஒ கோப்புக்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும்.
மேலும் இவற்றை கணணியில் நிறுவிய பின்புதான் பயன்படுத்த முடியும். பூட்டபிள் பென்டிரைவ், சீடி/டிவீடி மற்றும் ஐஎஸ்ஒ கோப்புக்களை சோதிக்க ஒரு இலவச போர்ட்டபிள் மென்பொருள் உள்ளது. இது அளவில் சிறியது ஆகும். லைவ் சீடிக்களை நேரடியாக விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே பயன்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கொள்ளவும். பின் அந்த போர்ட்டபிள் மென்பொருளின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும்.
பின் தோன்றும் விண்டோவில் Right-Click menu என்பதை கிளிக் செய்யவும். தற்போது MobaLiveCD முழுமையாக நிறுவப்படும். பின் உங்கள் விருப்ப முறைகளை தெரிவு செய்யவும். Run the LiveCD அல்லது Run the LiveUSB என்பதை தெரிவு செய்யவும்.
பின் ஐஎஸ்ஒ கோப்புக்களையோ அல்லது லைவ் சீடியினையோ தேர்வு செய்யவும். தற்போது MobaLiveCD கோப்பு சேமிக்கப்படவேண்டிய இடத்தை தெரிவு செய்து கொள்ளவும். அவ்வளவுதான் தற்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு இயங்க தொடங்கும். நீங்கள் சீடியில் உள்ள கோப்பை தேர்வு செய்வதே சிறந்தது.
இனி நீங்கள் இதை எளிமையாக பயன்படுத்த முடியும். Ctrl + Alt கீகளை அழுத்துவதன் மூலம் QEMU விண்டோவில் உங்களால் பயணிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். இயங்குதளத்தை நிறுவ கற்றுகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Download
No comments:
Post a Comment