flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sep 12, 2011

AVG Anti Virus மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு



நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை 
உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். 
இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணணியில் தீங்கிழைக்கும் கோப்புகளை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணணிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்: உலகளவில் 98 மில்லியன் கணணிகளில் இந்த மென்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது.
இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள். AVG Anti Virus 2012 இயங்கும் பொழுது உங்கள் கணணியை வேகத்தை குறைக்காது.
உங்களுடையை கணணியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.



No comments:

Post a Comment