flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 13, 2011

USB Drive மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு.


உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.

பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment