flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 17, 2011

இலவச Burning புரோகிராம்கள்..


Ashampoo CD Burning


 DVD எழுதுவதில் அஷாம்பு பல புரோகிராம்களைத் தருகிறது. இவற்றில் பல இலவசம் இல்லை என்றாலும் மிக ஆச்சரியமாக அண்மையில் இந்த நிறுவனம் தன்னுடைய டிவிடி எழுதும் புரோகிராமை அதன் முழுமையான திறன்களுடன் இலவசமாகத் தந்துள்ளது. அனைத்து மீடியாக்களிலும் சிடி மற்றும் டிவிடிக்களின் அத்தனை வகைகளிலும் எழுதக் கூடிய வகையில் இதன் புரோகிராம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருக்கப்பட்ட நிலையில் டேட்டா பேக் அப் அமைத்து சிடியில் எழுதும் வசதி உள்ளது.



இதற்கு பாஸ்வேர்ட் தரும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுருக்கப்பட்டு பதியப்படும் டேட்டா ஒரு சிடி அல்லது டிவிடிக்கு மேலான அளவில் இருந்தால் அதனைப் பிரித்து ஒன்றுக்கு மேற்பட்ட சிடி அல்லது டிவிடிக்களில் எழுதிக் கொடுக்கும் அருமையான வசதியும் தரப்பட்டுள்ளது. எனவே இலவசமாகத் தரப்படும் இத்தகைய புரோகிராம்களில் இது முதலிடம் பெறுகிறது.



தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் Download



CD BurnerXP PRO



பாராட்டத்தக்க வகையிலான கிராபிக்ஸ் இன்டர் பேஸ் துணையுடன் இந்த சிடி பர்னிங் புரோகிராம் கிடைக்கிறது. சிடி/டிவிடியில் டேட்டா எழுத பல வகைகளில் இயங்குகிறது. டேட்டா, ஆடியோ, மல்ட்டி செஷன் மற்றும் பல பிரிவுகளில் நமக்கு விருப்பமான வகையில் டேட்டா எழுதலாம்.



அத்துடன் எச்.டி. / டிவிடி மற்றும் புளு ரே சிடி சப்போர்ட் தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் இன்னொரு வசதி கவர் பிரிண்டிங்.என்.ஆர். ஜி. மற்றும் ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை உருவாக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ் 98 முதல் இன்று வரையிலான அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது. ஐ.டி.இ., யு.எஸ்.பி., பயர்வயர் மற்றும் ஸ்கஸ்ஸி டிரைவ்களுடன் இணைந்து செயல்படுகிறது. மிக மிகக் குறைவான மெமரியைப் பயன்படுத்துகிறது.



தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் Download



Deep Burner


பலரும் நன்றாக அறிந்த இன்னொரு சிடி பர்னிங் சாப்ட்வேர் டீப் பர்னர் ஆகும். சிடி/டிவிடி பர்னிங், ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்கம், சிடி/டிவிடிக்களை அவை இருக்கும் நிலையில் அமைத்து கொள்வது, லேபிள் பிரிண்டிங் போன்ற அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.


யு.எஸ்.பி. பயர்வயர் என அனைத்து டிரைவ்களுடனும் ஒத்துழைக்கிறது. இந்த புரோகிராமினை கீழே உள்ள முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.



தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்-Download

No comments:

Post a Comment