உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்பீர்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் எளிதாக மாற்றலாம். எளிய முறையாக இமேஜ் கோப்பை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஓபன் செய்யவும்.
பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் கோப்பாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். |
No comments:
Post a Comment