இது பொதுவாக சிலர் எதிர் நோகும் ஒரு பிரச்சினை. வெளிநாட்டில் இருந்து கணணியை வருவித்து கொண்டு வருபவர்கள் இங்கு வந்து கொடுத்து விடு அவர்கள் பாட்டுக்கு போய்விடுவார்கள்.
பார்த்தல் அது French,Duetch போன்ற மொழிகளில் கணணி இருந்தால் பெரிய கஷ்டம்தான். அந்த மொழியை System Optimisation மூலம் மாற்ற முடியாது. உடனேயே OS ஐ boot பண்ணி விடுவார்கள்.
நான் இப்போது உங்களுக்கு Windows Vista & W7 இல் மொழியை எப்படி மாற்றுவது என்று சொல்ல போகிறேன்.
Step : 1 : முதலில் இந்த லிங்க் ஐ க்ளிக் செய்து Vistalizator ஐ டவுன்லோட் செய்யவும்.
Step : 2 : பின்பு இந்த லிங்க் இற்கு போய் உங்கள் Windows வேர்சின் ( X32 bit or X64 bit ) ஐ தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Language file ஐ டவுன்லோட் பண்ணவும். உதாரணமாக English வேண்டுமென்றால் அதற்குரிய File ஐ தரவிறக்கவும். ( ஒவொரு Language file ம 200 MB ஐ விட கூடியது. )
Step : 3 : பின்பு Vistalizator ஐ திறக்கவும்.
Step : 4 : பின்பு ¨ Add languages ஐ க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான அதுவும் நீங்க தரவிறக்கிய language file ஐ தெரிவு செய்யவும்.
Step : 5 : http://www.froggie.sk/img/2.30/screen03.png
பின்பு உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து அதை OK பண்ணவும் . இந்த வேலை முடிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அதன் பின் உங்கட PC ஐ restart பண்ணவும்.
26
SEP
விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா?
விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன.
முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.
இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும்.
சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.
இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும்.
மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
No comments:
Post a Comment