flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 28, 2012

உங்களது கணணியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க.


உங்களது கணணியை பலரும் பயன்படுத்தும் வகையில் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைக்கலாம்.
இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் எண்டர் அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியலில் Administrative Template என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் சிஸ்டம் என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும். இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று Run Only Specified Windows Application என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Enable என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள Show என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது ஷோ டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து பின்னர் ஓ.கே பட்டனைக் கிளிக் செய்திடவும்.
எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் ஃபயர்ஃபாக்ஸ்.இ.எக்ஸ்.இ என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முயற்சி செய்தால் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment