flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 12, 2012

விண்டோஸ் 7ன் பாவனைக் கால​த்தை நீடிப்பதற்​கு


கணணியின் இயங்குதளங்களில் பிரபல்யமானதாகக் காணப்படும் விண்டோஸை பெருந்தொகைப் பணம் கொடுத்தே கொள்வனவு செய்ய வேண்டும்.
அவ்வாறில்லாவிடில் கிரக் பதிப்பு, Trial பதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும், எனினும் அதன் முழுமையான பயன்களை அனுபவிக்க முடியாது.
இவ்வாறு Trial பதிப்பை பயன்படுத்தும்போது அதன் கால எல்லையானது 30 நாட்களாகக் காணப்படும். இதன் பின்னர் அவ் இயங்குதளமானது சரியான முறையில் செயல்படாது போய்விடும்.
எனவே விண்டோஸ் 7ன் Trial பதிப்பை 30 நாட்களிலிருந்து 120 நாட்கள் வரை நீடிக்க முடியும். அதற்காக பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

1. Command Promptஐ Run as administrator எனும் முறையில் ஓபன் செய்யவும்.
2. அதன் பின் தோன்றும் Command Promptல் ”slmgr -rearm” என டைப் செய்து Enter keyஐ அழுத்தவும்.
3. சிறிது நேரம் கழித்து கீழே படத்தில் காட்டியவாறு ஒரு செய்தி தோன்றும். அவ்வாறு தோன்றிய பின் உங்கள் கணணியின் இயங்குதளத்தின் பாவனைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment