flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Aug 24, 2023

தமிழில் பயன்பாட்டிற்கு Google. Bard

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் பார்ட் | Google Bard Tamil Language New Feature
 

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் Google Bard பயன்பாட்டிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இருந்த போதும் தமிழ் மொழியில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.


ஐந்து வெவ்வேறு தெரிவுகள்

இந்நிலையில் தமிழ்  மொழி  (google bard) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பயனர்கள் ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பைக் கேட்க விரும்பினால் அல்லது கவிதை அல்லது ஸ்கிரிப்டைக் கேட்க விரும்பினால் இந்த புதிய அம்சங்கள் உதவியாக இருக்கும்.

பயனர்கள் பார்டின் பதில்களின் தொனியையும், பாணியையும் ஐந்து வெவ்வேறு விருப்பங்களுக்கு மாற்றலாம்.

ப்ராம்ட்களில் (prompt) படங்களைச் சேர்க்கும் திறன், பார்டின் பதில்களை உரக்கக் கேட்பது மற்றும் பார்டின் பதிலை நீளமாகவோ அல்லது குறைவாகவோ மாற்றும் திறன் போன்ற புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஆங்கில மொழியில் உள்ளது, விரைவில் புதிய மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment