flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Nov 29, 2023

Google பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் | A Special Notice For Google Users

 பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

கூகுளின் மேம்படுத்தப்பட்ட பயனர்கள் கணக்குகள் கொள்கையின்படி, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என்று அறிவித்தது.


பயன்பாட்டில் அல்லாத, செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது கடவுச்சொல் மறந்த கூகுள் கணக்குகள், சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட தவறான முறையில் கையாளப்பட வாய்ப்புள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும், ஆகவே கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment