இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.
ஆனால் Delete செய்த அனைத்து தகவல்களையும் மிக இலகுவாக Recover செய்து கொள்ள முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
Delete செய்த File-களை மிக இலகுவாக Professional Data Recovery Tool-களை பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.
உங்களிடம் இருந்து உங்கள் போனையோ அல்லது Pen Drive-ஐயோ வாங்கியவர் , உங்கள் தரவுகளை Recover செய்யும் பட்சத்தில் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறான பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு உங்கள் தனிப்பட்ட File-களை Recover செய்ய முடியாதபடி Delete செய்வது என்று காட்டுகிறேன்.
இதனால் உங்கள் தனிப்பட்ட File-கள் பாதுகாக்கபடுவதோடு நீங்கள் எதுவித பயமும் இன்றி உங்களுடைய போனையோ அல்லது Pen Drive-ஐயோ இன்னொருவருக்கு விற்பனை செய்ய முடியும்.
Recover செய்ய முடியாதவாறு ஒரு File-ஐ எவ்வாறு Delete செய்வது?
உங்களுடைய கோப்புகளை எந்த விதமான Recovery Tool-ஐ பயன்படுத்தியும் Recover செய்ய முடியாத வண்ணம் Delete செய்ய File Shredder எனும் மென்பொருள் ஒன்று உதவுகிறது.
இங்கே கிளிக் செய்து File Shredder மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்யுங்கள்.
இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் கோப்புக்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.
கீழே காட்டபட்டிருப்பது போல் File Shredder எனும் ஒரு Option தோன்றும்.
அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் கோப்புக்களை Delete செய்யுங்கள்.
அவ்வளவு தான். இனி எந்தவிதமான File Recovery Tool-ஐ பயன்படுத்தியும் உங்களது Delete செய்யப்பட்ட கோப்புக்களை மீட்டெடுக்க முடியாது.
இவ்வாறு உங்கள் அனைத்து கோப்புக்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல், கீழே குறிப்பிட்டிருப்பது போல், Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.
பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.
இவ்வாறு Format செய்வதால், உங்கள் External Storage Device-ல் தங்கி இருக்கும் அனைத்து System File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.
இப்போது எதுவித பயமும் இன்றி குறிப்பிட்ட Storage Device-ஐ இன்னொருவருக்கு கொடுக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.
No comments:
Post a Comment