flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Oct 30, 2014

CD ல் உள்ள File களை Copy செய்யாதீர்கள்...






நாம் பொதுவாக DVD படங்களை நம்முடைய கணணியில் உள்ள DVD Drive களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை Copy செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை DVD Drive ல் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.

ஒவ்வொரு File ஐ உம் நாம் Video Player ல் திறக்க வேண்டும். அதில் பலவிதமான File கள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில File கள் ஒழுங்காக Copy ஆகியிருக்காது.

எனவே நாம் DVD க்களை Copy செய்வதற்கு பதிலாக அதனை டDVD IMAGE ஆக உருவாக்கி கொள்ளலாம். IMAGE என்பது CD/DVD களின் Copy ஆகும். இவை பொதுவாக iso, nrg போன்ற Format களில் இருக்கும்.

படங்களை மட்டும் இன்றி game ,data, os போன்ற DVD க்களை Copy செய்யாமல் Image ஆக Copy செய்வதே சிறந்தது. OS போன்றவை Bootable CD/DVD யாக இருக்கும். அதனை சாதரணமாக Copy செய்து மற்றொரு CD/DVD யில் பதிவு செய்தால்(burn) அவை Boot ஆகாது .

எனவே நீங்கள் எந்த ஒரு CD/DVD யை Copy செய்வதாக இருந்தால் அதனை Image ஆக Copy செய்யுங்கள். அதனை நாம் CD/DVDயில் burn வேண்டும் என்றால் ஒரே கிளிக்கிள் எந்த ஒரு தகவல் இழப்பும் இல்லாமல் burn முடியும். இது போன்ற தகவல்களை CD/DVD Image களாக தயாரிக்க பல மென்பொருட்கள் உள்ளன.

நாம்  பொதுவாக பயன்படுத்தும் nero  இதனை கொண்டு CD/DVD Image களை உருவாக்கிக் கொள்ளலாம். அதனை பிறகு CD/DVDகளில் burn கொள்ளலாம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 



No comments:

Post a Comment