flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Dec 27, 2015

விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

Windows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. கணனி வன்பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படப்போவதாயின் அல்லது ஏற்கனவே சில பழுதுகள் ஏற்பட்டிருந்தாலோ அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது காணப்படுகிறது.
அதனால் அந் நேரத்தில் System செயலிழந்து போவதை காணலாம் அல்லது BSOD  (“Blue Screen Of Death”) எனும் செயற்பாடு நடைபெறும். அதாவது கணினித்திரை முழுவதுமாக நீல நிறத்திலான ஒரு திரை தோன்றி அதில் உங்கள் கணினியில் ஏற்பட்டிருக்கும் பழுது பற்றிய எச்சரிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் அதை தீர்ப்பதற்கான வழி பற்றியும் முன்னர் ஒரு பதிவில் பார்த்திருந்தோம்.
அந்த பதிவில் பிரச்சினை வந்தால் எப்படி தீர்ப்பது என்று பார்த்தோம். இப்படியான பிரச்சினை வரும்போது கணினி Automatic ஆக Shutdown/Restart ஆகும். இதனால் செய்துகொண்டிருக்கும் வேலைகள் தடைப்படும், நேரம் விரயம் ஆகும். ஆகவே இப்படியான பிரச்சினைகளின்போது கணினி  Shutdown/Restart ஆகாமல் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்
இங்கு படிமுறை படிமுறையாக குறிப்பிடப்படிடிருக்கும் செயற்பாட்டை அவதானிப்பதன் முலம் இதனை இலகுவாக அறிந்து கொள்ளலாம்
படிமுறை 1: முதலில் உங்கள் Desktop திரையில் காணப்படும் My Computer எனும் Icon ஐ Right click செய்து அதில் Propertiesஎன்பதை கிளிக் செய்யவும்.
படிமுறை 2: அடுத்து வரும் விண்டோவில் இடது பக்க பட்டியலில் உள்ள System protection எனும் பகுதியை கிளிக் செய்யவும். இவ்வாறு கிளிக் செய்தவுடன் புதிதான ஒரு பக்கம் திரையில் தோன்றும்.
படிமுறை3: அவ்வாறு தோன்றும் புதிய சாளரத்தில் System properties எனும் பக்கம் தோன்றும் அதில் Advanced எனும் பகுதியை கிளிக் செய்யவும்.
படிமுறை4: அவ்வாறு தோன்றும் திரையில் கீழ் பகுதியில் Startup and Recovery section  எனும் பகுதி காணப்படும் அதில்Settings button ஐ கிளிக் செய்யவும்
படிமுறை 5: அவ்வாறு தோன்றும் திரையில் System failure எனும் தலைப்பிட்டதன் கீழ் இரண்டு பிரிவுகள் காணப்படும்
  • Write an event to the System log
  • Automatically Restart
எனும் இரண்டு தரவுகள் காட்டப்பட்டிருக்கும் இரண்டின் முன்பும் சரி அடையாளம் இடக்கூடிய பெட்டி காணப்படும். அதில் இரண்டாவதாக காட்டப்பட்டிருக்கும் Automatically Restart எனும் தரவின் முன்னால் உள்ள சரி அடையாளத்தை எடுத்து விடவும்.
பின் OK எனும் Button ஐ கிளிக் செய்யவும்.
இனி ஒரு போதும் அடிக்கடி  Restart மற்றும் Shutdown  பிரச்சினைகள் வந்து உங்களை எரிச்சலுக்குள்ளாக்காது.

1 comment:

M0HAM3D said...

thanks
tamilitwep.blogspot.com

Post a Comment