Pen Drive இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்?
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள்E: என கொடுத்து Enter அழுத்தவும்.
- நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
- சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
நண்பர்கள் இந்த பதிவு தற்பொழுது உங்களுக்கு உபயோகப்படாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் தேவைப்படும். புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment