flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Feb 9, 2015

ஆன்ட்ராய்ட் போன்களுக்கான VLC மீடியா பிளேயர்

கணனியில் MP4 உட்பட பல பார்மெட்களில் உள்ள ஓடியோ மற்றும் வீடியோ பாடல்களை இயக்க நாம் அனைவரும் பயன்படுத்துவது VLC மீடியா பிளேயர்.
இதனை ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் வண்ணம், சோதனை பதிப்பாக வீடியோ லேன் என்னும் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.
பயனாளர்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்தி வந்த நிலையில், அடிக்கடி கிராஷ் ஆனது, மேலும் பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டன.
இவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது முழுமையான தொகுப்பு வெளியாகியுள்ளது.
ஆன்ட்ராய்ட் 2.1 முதல் அதன்பின் வந்த அனைத்து ஆன்ட்ராய்ட் சிஸ்டங்களிலும் பயன்படுத்தும் வண்ணம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment