அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளையும் கண்டு பிடிப்பதற்கான ஒரு வழி. இதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதுமானது.
அனைவரும் ஆன்ட்ராய்ட் மொபைல் ஒன்று வாங்கியவுடன் செய்யும் உடனடி வேலை Google Play Store பயனர் கணக்கு ஒன்று ஆரம்பிப்பது ஆகும் ஏனெனில் அதன் ஊடாக தான் பில்லியன் கணக்கான இலவச மொபைல் ஆப்ளிக்கேஷன்களை தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த பிளே ஸ்டோர் கணக்கு Google மற்றும் உதவி கொண்டு தொலைந்து போன உங்கள் கையடக்க தொலைபேசியை கண்டு பிடிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
பின்வரும் படிமுறைகளை உங்கள் தொலைபேசியில் செய்யவும்
1.உங்கள் மெனுவில் Google Settings Application ற்கு செல்லவும்
2.அதில் Android Device Manager என்பதில் Tab செய்யவும்.
3.அடுத்து வரும் பக்கத்தில் கீழே காட்டப்பட்டு உள்ளது போல இரண்டு ஆப்ஷன்களையும் Tick செய்யவும்
4.அடுத்து Activate என்பதை கிளிக் செய்து வெளியேறவும்
5.அடுத்து உங்கள் கணணியில் பின்வருமாறு செய்யவும்
நீங்கள் உங்கள் Play store கணக்கை ஆரம்பிக்கும் போது கொடுத்த Gmail முகவரி மற்றும் Password ஞாபகம் இருக்கிறது தானே? இல்லை என்றால் ஞாபக படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் Google கணக்கை Login செய்து கொள்ளுங்கள். அதன் பின் கீழே தரப்பட்டுள்ள லின்க் கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.
நீங்கள் இப்போது இருப்பது Google Android Device Manager எனும் பக்கத்தில் ஆகும் அங்கே உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த விசேட தளத்தில் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம்,அதனை Ring செய்ய வைப்பது மட்டுமன்று அதனை Lock செய்யவும் முடியும்.
நீங்கள் இந்த பக்கத்தில் உன்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளை பிந்தொடர முடியும்.இந்த சேவையை உங்கள் இன்னொரு தொலைபேசியின் ஊடாக செய்ய முடியும். இதற்கு உங்கள் இன்னொரு மொபைலில் Play Store சென்று எனும் Android Device Manager மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.
No comments:
Post a Comment