கணனியில் இயங்குதளம் ஒன்றினை நிறுவிய பின்னர் அது முறையாகச் செயற்படுவதற்கு கிராபிக்ஸ், ஓடியோ, நெட்வேர்க் போன்ற ட்ரைவர் மென்பொருட்கள் நிறுவவேண்டியது அவசியமாகும்.
இம்மென்பொருட்களை நிறுவுவதற்கு கணனியின் மொடல் தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு கணனியின் மொடல் தெரியாத சந்தர்ப்பங்களில் AMD வகை ட்ரைவர்களை நிறுவுவதற்கு AMD Driver Autodetect எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணனியின் மொடல், இயங்குதளத்தின் வகை என்பவற்றினை அறிந்து அதற்கேற்ப நிறுவப்பட வேண்டிய ட்ரைவர் மென்பொருட்களை தானாகவே தரவிறக்கம் செய்து கணினயில் நிறுவும்.
எனினும் இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு மட்டுமே பொருந்தும். Download
|
No comments:
Post a Comment