flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sep 26, 2021

உங்கள் Smart Phoneல் Virus மற்றும் Malware இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? அதை நீக்க இதை செய்யுங்கள்.

 



 Smart Phoneல்வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு சமயத்தில் வைரஸ் மற்றும் மால்வேர் குறித்த சந்தேகம் இருக்கும்.

கண்கவர் விளம்பரங்கள், கவர்ச்சி லிங்குகள் ஆகியவற்றை ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு அனுப்பும் சமூகவிரோதிகள், இந்த லிங்குளை கிளிக் செய்து தங்கள் வலைக்குள் விழுபவர்களை தங்களின் டார்க்கெட்டாக மாற்றுகின்றனர். அதாவது, ஸ்மார்ட்போன் யூசர்கள் போலி லிங்குகளை கிளிக் செய்தவுடன், அந்த லிங்குகளில் இருக்கும் வைரஸ்கள், ட்ரோஜன்கள் மற்றும் மால்வேர்கள் உடனடியாக செல்போன்களில் ஊடுருவி, பணப் பரிவர்த்தனை தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை சேகரித்துக்கொள்கின்றனர்.

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும், அதனை தொடும்போது மிகவும் சூடாக இருக்கும். இது, உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறது என்பதற்கான அடையாளம். சமூகவிரோதிகள் மறைமுகமாக உங்கள் செல்போனை உபயோகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இணைய டேட்டா வேகமாக தீர்ந்து போதல் அல்லது தொலைப்பேசி கட்டணம் விரைவாக தீர்ந்து விடுதல், பேட்டரி சீக்கிரம் ஜீரோ நிலையை அடைந்தால், செல்போன்களில் வைரஸ் உள்ளது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

வழக்கத்திற்கு மாறாக பல்வேறு விளம்பரங்கள் செல்போனில் தோன்றும். இது. தவறான சாப்ட்வேர் உங்கள் செல்போனில் ஊடுருவி மறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி.

வைரஸ்களை தவிர்ப்பது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத இணையப் பக்கங்கங்களில் இருந்து எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

எந்தவொரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும், அவை உங்கள் செல்போனில் மேற்கொள்ளக்கூடிய சில அனுமதிகளைக் கேட்கும். செயலியின் தன்மையைப் பொறுத்து, குறிப்பிட்ட அனுமதியை மட்டும் கொடுக்க வேண்டும்.

கணிணியைப்போலவே செல்போன்களுக்கும் சில ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து செல்போனை தேவையற்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மால்வேர்களை நீக்குவது எப்படி?

நீங்கள் பதிவிறக்கம் செய்யாத சாப்ட்வேர்கள், லிங்குகள் மொபைலில் தங்கியிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

உங்கள் செல்போனில் இருக்கும் செயலிகளில், எவை அதிக டேட்டாவை உபயோகிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். செயலியின் உபயோகத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த செயலியை உடனடியாக நீக்கிவிடுங்கள். 

No comments:

Post a Comment