flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 10, 2015

உலகை நொடியில் இணைக்கும் sim card சுவாரசியமான தகவல்கள்.


உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.
சிம் (Sim) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் (Chip) ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட (international mobile subscriber identity- IMSI) சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மேலும் தனிப்பட்ட வரிசை எண் (ICCID), பாதுகாப்பு அங்கீகார அம்சம் (security authentication), இடுதல் தகவல் (ciphering information), உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்
அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக Department of Telecommunications (DoT) பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் European Telecommunications Standards Institute சிம் கார்டின் அம்சங்களை TS 11.11 என்ற குறியீட்டில் வரிசைப்படுத்தியது. இது சிம்மின் இயக்கத்தை முழுவதும் விளக்குவதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு Giesecke & Devrient என்ற நிறுவனம் சிம் கார்டை வெளியிட்டது. 300 சிம் கார்டுகளை தயாரித்த அந்த நிறுவனம் அதை Finnish wireless network operator Radiolinjaவிடம் விற்றது.
இதுவே சிம் கார்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த சிம் கார்டுகள் 5v, 3v, 1.8v என மூன்று Volt-களில் வெளியானது. 1998ம் ஆண்டு முன்னர் 5v சிம் கார்டுகள் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருந்தன.
சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் (Chip) உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.
Chip பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.
இந்த தொலைத்தொடர் சேவையில் Data encryption என்ற முறையில் அனுப்பப்படும் தகவலானது பாதுகாப்பாக பரிமாற்றப்படுகிறது. இந்த முறையை 2013ம் ஆண்டு cryptographer and security researcher ஆக உள்ள Karsten Nohl என்பவர் சிம் கார்டுகளில் கொண்டு வந்தார்.
மேலும் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Nano Sim புதிய அனுபவத்தை பலருக்கும் கொடுத்து இருக்கும். அதற்கு ஏற்றவாறு தற்போது வரும் ஸ்மார்ட் போன்களும் அந்த அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.
தொலைத்தொடர்பு துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கும் வேளையில் சிம் கார்டுகளில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment