flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 13, 2013

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்.


கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.
இவ்வகையான சம்பவங்கள் இணையப் பாவனையின் போது அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு கணனிப் பாவனையாளர்களை அறியாமல் அவர்களது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடுடைய (ஆபாசமான) வீடியோ கோப்புக்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கான் மூலமாக கண்டறிந்து அவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Media Detective எனும் மென்பொருள் உதவுகின்றது.
எனினும் இம்மென்பொருளானது குறித்த கோப்பு வகைகள், அவற்றின் பெயர்கள், போன்றவற்றின் அடிப்படையிலேயே இச்செயன்முறையை மேற்கொள்ளுகின்றது.

No comments:

Post a Comment