நீங்கள் உங்கள் கணணியை தேவைகள் நிமிர்த்தம் format செய்து மீண்டும் நிறுவியிருப்பீர்கள். அப்போது உங்களது கணணியை மீண்டும், மீண்டும் அக்டிவேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவிர்கள். சில சமயங்களில் இது தொடர்ந்து உங்களுக்கு நடக்கும் பொழுது கணணியை சரி செய்வதில் வெறுப்படைந்து போவீர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் எப்படி இலகுவாக அக்டிவேசன் ஸ்டேடசை (Activation Status) மீள்காப்பு (Backup) செய்து மிண்டும் விண்டோஸ்யை நிறுவுவது என்று இன்று பார்ப்போம்.
குறிப்பு: இந்த பதிவில் நாங்கள் எவ்வாறு விண்டோஸ்யை மீள் செயல்படுத்துதல் (Activate) செய்வது என்று மட்டும் பார்ப்போம்.
இந்த செய்முறையை நேர்த்தியாக செய்வதற்க்கு நாங்கள் அட்வான்ஸ் டோக்கேன் மனேஜர் (Advance Token Manger) என்ற மென்பொருளை பயன்படுத்துவோம். இது இலகுவாக உங்களது விண்டோஸ் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் மீள் காப்பு (Backup) செய்துகொள்ளும். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் நாங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் தகவல்களை மீள் நிறுவிக்கொள்ளலாம் (Restore). அட்வான்ஸ் டோக்கேன் மனேஜரை (Advance Token Manger) பயன்படுத்தி விண்டோசின் தகவல்களை மீள் நிறுவும் பொழுது, விண்டோஸ் முதலில் அட்வான்ஸ் டோக்கேன் மனேஜரின் ஊடாக விண்டோஸ் பற்றிய உண்மை தன்மை தகவல்களை உறுதிசெய்து கொள்ளும். எல்லாவிதமான தகவல்களும் உறுதிபடுத்தப்பட்டால் நாங்கள் இலகுவாக விண்டோசை மீள் அக்டிவேட் பண்ணிக்கொள்ளலாம்.
அட்வான்ஸ் டோக்கேன் மனேஜர் (Advance Token Manger) என்ற மென்பொருளை நீங்கள் இங்கு இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். தரவிறக்கிய பின்பு அதனை திறந்து விண்டோசில் இயக்கி மற்றும் செயலாக்கிகொள்ளவும் (Run and Execute). அட்வான்ஸ் டோக்கேன் மனேஜரை (Advance Token Manger) இயக்கிய பின்பு கீழே உள்ள உருவில் காட்டப்பட்டவாறு தோற்றமளிக்கும். அதில் விசாலமான Backup Activation பொத்தானை அழுத்தி மீள் காப்பு செய்துகொள்ளுங்கள். அதில் காணப்படும் “BBB” என்ற எழுத்து தொடர்கள் உங்களது தயாரிப்பு விசையை (product key) மறைத்து காட்டும். பயப்படவேண்டாம் இதில் காட்டப்படும் தயாரிப்பு விசை (product key) உங்களது உண்மையான தயாரிப்பு விசை (product key) இல்லை.
Advance Token Manger யில் உள்ள Backup Activation பொத்தானை அழுத்திய பின்பு உங்களுக்கு செய்தி தகவல் ஒன்றை காட்டும். இது 99% சகல கணணியிலும் தோன்றும் என்பதை உறுதியளிக்கின்றோம். அதில் yes என்பதை அழுத்தி தொடரவும்.
செயலாக்கம் (activation) முடிந்த பின்பு மீள் காப்பு செய்முறை தொடங்கும். பின்பு எங்கே நீங்கள் உங்களது Advance Token Manger கோப்புறையை (Folder) சேமித்து வைத்திருக்கிறீர்களோ அங்கே செயலாக்கம் (activation) கோப்புறை சேமிக்கப்படும். கிழே உள்ள உருவில் காட்டப்பட்ட செயலாக்கம் (activation) கோப்புறையின் பெயர் “Windows Activation Backup” என்றவாறு காட்டப்பட்டு இருக்கும்.
இத்தோடு செயலாக்கம் (Activation) முடிந்தது, தொடர்ந்து உங்களது கணணியில் விண்டோசை ஏற்றவும் (reloaded). கிழே படத்தில் உள்ளவாறு "not activated" என்பதை நீங்கள் உங்கள் திரையிலும் காணலாம்.
மீண்டும் அட்வான்ஸ் டோக்கேன் மனேஜரை (Advance Token Manger) நிறுவி அங்கே உங்களது விண்டோசை செயலாக்குவதற்கு (Avtivate) "Restore Activation" பொத்தானை அழுத்துங்கள்.
நீங்கள் மீள் நிறுவிய (Restore) பின்பு கிழே படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு செய்தி பெட்டி தோன்றும். அதில் Yes என்பதை அழுத்திய பிறகு மீள் நிறுவி (restoration) ஆரம்பிக்கும்.
அதன் பிறகு ஒரு செய்தி பெட்டி ஓன்று தோன்றும் அதில் வெற்றி (Success) செய்தியை காட்டி நீங்கள் செய்முறையை முடித்ததை உறுதிசெய்யும்.
அவ்வளவுதான் நீங்கள் வெற்றிகரமாக விண்டோஸ் அக்டிவேஷனை முடித்து விட்டிர்கள். இனி அக்டிவேஷனை உறுதிப்படுத்துவதற்கு System Settings க்கு செல்லுங்கள். அங்கே உங்களது விண்டோஸ் அக்டிவாய் (genuine badge) இருப்பதை பார்க்கலாம்.
இனிதே நிறைவு செய்த திருப்தியில், ஒரு தகவல் இந்த advanced token manager யை பாவித்து விண்டோஸ் office யையும் செயலாக்கம் செய்யலாம். இது விண்டோஸ் 7 சகல பதிப்புகளுக்கும் (version) வேலை செய்யும்.
நன்றி.
No comments:
Post a Comment