flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 22, 2011

அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு



இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன.

ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு போர்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் இல்லாமல் இருக்கலாம். இதற்காக ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அது தான் Format factory 2.60 என்ற மென்பொருளாகும்.

[Team Viewer]- உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.


வீட்டிலிருந்து கொண்டே உங்கள் காரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வை
இந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது.
தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் ரீமோட் டெஸ்க்டொப் போன்ற மற்றுமொரு மென்பொருள் கருவியே டீம் வீவர். (Team Viewer) இது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்பை விட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது
.
டீம் வீவர் மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.

May 16, 2011

அதிவேகமாக தரவிறக்கம் (Download) செய்ய சிறந்த மென்பொருள்


நம்முடைய இணைய இணைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்னவென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Chrome, Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி பார்ப்போம்.


Internet download manager (IDM) இந்த மென்பொருள் download செய்யும் போது ஒரு file ஐ உடைத்து (அளவை) பின்னர் அதனை ஒன்று சேர்க்கின்றது இதனால் நாம் முன்னர் download செய்ததைவிட வேகமாக download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் வேறு என்ன வசதிகள் இருக்கு என்று பார்ப்போம்.

May 14, 2011

கணினியை கவனமாக பாதுகாக்க அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.  
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

May 8, 2011

கணினி ஓர் அறிமுகம்


கணினி என்பது எண் முதலான தரவுகளைக் உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.

May 4, 2011

கோப்புகளில் உள்ள கடவுச்சொல்லை நீக்குவதற்கு




சில சமயங்களில் நாம் இணையத் தளத்தில் நமக்கு மிகவும் தேவையான சில கோப்புகளை பதிவிறக்கம் செய்வோம்.
அந்த கோப்பில் நாம் நமக்கு பிடித்த சில மாற்றங்களை செய்யும் பொழுது, அதை செய்ய முடியாத படி அந்த கோப்பிற்கு கடவுச்சொல்லை கொடுத்திருப்பார்கள்.
இப்படி பட்ட சமயத்தில் இந்த மென்பொருள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த மென்பொருளில் அனைத்து வகையான கடவுச்சொற்களையும் இந்த மென்பொருள் மூலம் மிக சுலபமாக நீக்கி விடலாம்.
கீழே உள்ள அனைத்து வகையான கோப்புகளிள் உள்ள கடவுச்சொற்களை இந்த மென்பொருள் உதவியுடன் நாம் எளிதாக நீக்க முடியும்.

May 3, 2011

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application


கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது. Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக பாவனைக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். 

Run கட்டளையை பயன்படுத்தி புரோகிராம்களை வேகமாக திறக்க


கணினியில் பனிபுரியும் போது நாம் அப்ளிகேசன்களை திறக்க START->All Programs வழியாக சென்று மட்டுமே ஒப்பன் செய்வோம். ஆனால் இதனை நாம் வேகமாக திறக்க வேண்டுமெனில் Run கட்டளையின் மூலமாக திறக்க முடியும். உதரணத்திற்க்கு Microsof Word னை ஒப்பன் செய்ய Run கட்டளையை ஒப்பன் செய்து winword என்று தட்டச்சு செய்து OK, பட்டனை அழுத்தினால் MS-WORD ஒப்பன் ஆகும்.
அதிகமான Application கள் நிறுவபட்டிருக்கும் கணினியில் Application களை வேகமாக திறக்க முடியும்.Run கட்டளையை பயன்படுத்தி Application களை திறக்க உதவும் சில கட்டளைகள் சில,

எவ்வாறு System State data வினை பேக்அப் செய்வது?


இன்றைய நிலையில் பெரும்பான்மையனவரால் பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும், இதற்கு பிறகு விஸ்டா,7 போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள்  மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளிட்டிருந்தாலும் இன்றும் அனைவராலும் விரும்பி பயன்படுத்தபடும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி ஆகும். ஏனெனில் இதன் எளிமை தான், மேலும் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் எந்த ஒரு நிலையிலும் இயங்க கூடியது ஆகும். நாம் எதாவது சிஸ்டம்  Registry  மாற்றம் செய்யும் போது எதாவது பிரச்சினை எலும், அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க System State data வினை பேக்அப் எடுத்துகொள்வது நல்லது பேக்அப் செய்ய.

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0


 நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.

NetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத்தை நிறுவ



மீப காலமாக சந்தையில் களமிறங்கியுள்ள Netbook என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கணினிகளை மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவற்றின் விலை குறைவாக இருப்பதும், கையில் எடுத்துச் செல்வது எளிது என்பது போன்ற காரணங்களால் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆச்சர்யமல்ல.
ஆனால் இந்த நெட்புக்கில் DVD ட்ரைவ் இல்லை என்ற ஒரு குறைபாடு உண்டு. இதன் ஒரு சில மாடல்களில் இயங்குதளம் நிறுவப்படாமல், Free DOS  உடன் வருகிறது. இது போன்ற நெட் புக் களில் விண்டோஸ் 7 , விஸ்டா போன்ற இயங்குதளங்களை நிறுவ, External DVD ட்ரைவ்களை நாட வேண்டியுள்ளது.
இந்த Netbook அல்லது DVD ட்ரைவ் இல்லாத/பழுதடைந்த கணினிகளில் பென் ட்ரைவ் மூலமாக இயங்குதளத்தை நிறுவ முடியுமா?   இதற்கு நமக்கு தீர்வாக அமைகிறதுWinToFlash என்ற மென்பொருள் கருவி.

ISO பைல்களை உருவாக்க, கன்வெர்ட் செய்ய சீடி/டிவீடி-க்களில் ரைட் செய்ய


அளவில் மிக்பெரிய பைல்கள் மற்றும் இயங்குதளங்கள் அனைத்துமே ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். நாம் புதியதாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் ஒரு சில மென்பொருள் கூட ISO பைல் பார்மெட்டில்தான் இருக்கும். லினக்ஸ் இயங்குதளங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போதும் ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் எதாவது ஒரு ரைட்டிங் மென்பொருளை அணுக வேண்டும். சிடி ரைட்டிங் என்றால் உடனே நினைவுக்கு வருவது நீரோ மென்பொருள் மட்டுமே. இந்த மென்பொருளில் ISO பைல்களை கன்வெர்ட் செய்து பூட்டபிள் பைலாக மட்டுமே உருவாக்க முடியும். மற்ற வசதிகள் எதுவும் இல்லை, குறிப்பாக வேறொரு பைல் (CUE, BIN, NRG, MDF, CDI) பார்மெட்டாக மாற்றம் செய்ய முடியாது. மற்ற இமேஜ் பைல் பார்மெட்களை ISO பைல் பார்மெட்டாகவும் மாற்றம் செய்ய முடியாது. இவையணைத்தையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும்.

பூட்டபிள் (bootable) விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க


         
கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணிப்பொறியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் பெண்ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுவது என்று வினவினார். இதோ அதற்கான பதில்.

May 2, 2011

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)


இனி உங்களிடம் அவசியம் விண்டோ சிடி இருக்கவேண்டும் உங்களிடம் ஒரிஜினல் பதிப்பாக இருந்தால் கீழ் உள்ள விபரங்கள் தங்களுக்கு அவசியப்படாது அல்லாது நீங்கள் காப்பி எடுப்பதாக இருந்தால் (இது சட்டப்படி தவறுதான்) நீரோவின் வழியாக சிடியிலிருந்து சிடி காப்பி எடுத்து எரிக்கும் வசதி இருக்கிறது அதையே பயன்படுத்துங்கள் அது எப்படியென படத்தை பாருங்கள் புரியும்.

Format செய்யமுடியாத "Pen Drive" வழிமுறை.


முதல் வழிமுறை 

Start ->Run டைப் cmd இப்போது ஒரு கருத்த விண்டோ திறக்கிறதா இதுதான் கமாண்ட் பிராம்ப்ட் சரி இனி நீங்கள் செய்ய வேண்டியது format/x G: என டைப் செய்யுங்கள் இதில் G எனகிற எழுத்து உங்கள் பென் டிரைவ்க்கான எழுத்தாகும் உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுங்கள் அடுத்து ஒரு எண்டர் கொடுங்கள், நான் தயராயிருக்கிறேன் என்பதாக ஒரு செய்தி வரும் அப்போதும் ஒரு எண்டர் கொடுங்கள், அடுத்ததாக பங்கீடு நடக்கும் இப்போதும் உங்களுக்கு ஒரு செய்தி வரும் தயங்காமல் ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்.

ISO இமேஜ்களை Pen Drive மற்றும் CD/DVDக்களில் Bootable பைல்களாக மாற்ற


ISO பைல்களை பூட்டபிள்(Bootable) பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.

portable software உருவாகுவது எப்படி?

சில தளங்களில் போட்டபிள் மென்பொருள் கிடைக்கும் ஆனால் எல்லா மென்பொருளுக்கும் கிடைக்குமாவென்றால் இல்லை என்பதாக பதில் இருக்கும் ஆனால் இங்கு நீங்கள் விரும்பும் எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் அதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது ஆனால் பதிவின் நீளம் கருதி இப்போடு ஒன்றை மட்டுமே எழுதுகிறேன் மேலும் இந்த பதிவின் வரவேற்பை பொறுத்து அடுத்த வழிமுறையும் விரைவில் எழுதப்படும் சரி விஷயத்துக்குள் செல்வோம் நீங்கள் இந்த கையடக்க மென்பொருள் மாற்றி தரவிறக்கவும் இதன் அளவு 7எம்பி-க்கும் குறைவே இதை வின்ரார் கொண்டு விரித்ததும் படத்தில் இருப்பது போல இருக்கும் இது விலையுள்ள மென்பொருள்தான் ஆனால் நான் கொடுத்துள்ளது கிராக் செய்யப்பட்டது தான் இதுவும் ஒருவகை குற்றமே இனி உங்கள் எலியால் இருமுறை கிளிக்கவும் புதிய சிறிய விண்டோ திறக்கும் இதனுள்ளேயே இன்ஸ்டாலேசன் மற்றும் இதற்கான கீயும் இருக்கிறது.

BIOS - பயோஸ்


கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System என்பதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் புரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ராம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும்.

May 1, 2011

எமது கணினியில் உள்ள "Drive" மறைத்து வைக்க..


நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,

Card Recovery (Serial number Free)


சிலர் கணினியில் அல்லது மொபைலில் படம் , பாட்டு,தகவல் போன்றவற்றை வைத்து இருப்பார்கள் . அவற்றில் ஏதேனும் அழிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம் .
அதற்காகவே சிறந்த மென்பொருள் உள்ளது.
 இந்த மென்பொருள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.



 நீங்கள் இத்னை உபயோகப்படுத்திவிட்டு மறக்காம எனக்கு கருத்தினையும் ஓட்டினையும் போடுங்கள்...
 (20 seconds)

Deep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள் (Full+Serial)

இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தங்கவல்களை அழியாமலும் ஏணையவர்களால் மாற்றப்படாமலும் வைரஸ்களிலிரிந்தும் இலகுவாக பாதுகாக்க உதவிகிறது.

Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்து விட்டால் Deep Freeze மென்பொருள் Install செய்யும்போது கணினி எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் கணினியை வைத்திருக்க உதவிகிறது.

ஒரே மென்பொருளில் பயனுள்ள 309 இலவச மென்பொருட்கள்


இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.infஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள் , அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும், இவ்வரான அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft  நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory  யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......



தலைப்பிற்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என யோசிக்கிரீங்களா? இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R)  திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் Systemஎன்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay  என்பதற்கு கீழுள்ள Enabled 

        என்பதையும்  Turnoff Autoplay on இல் All drives தெரிவுசெய்யுங்கள்

05. இப்பொழுு நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும்  வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?


எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R)  திறந்து drive வின் எழுத்தை  கீழுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து  ok பட்டனை அழுத்துங்கள். 

இவ்வாறு open செய்யிம்போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம்.



Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?



இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில்

உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய



எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் 


எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )


இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.


விண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை. 

கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம். 

கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.

பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் "ican" மாறிவிட்டிருந்தால்..


இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் பென் டிரைவை (Pen drive) கொண்டுவந்து கொடுத்து வைரஸ்கள் நிறைய நுழைந்துவிட்டன என்றும் சுத்தமாக்கி தருமாறும் கேட்டார்.என்னுடைய கணிணியில் Avast Free Antivirus போட்டிருக்கிறேன். பென் டிரைவைச் செருகி சோதனை செய்த பின்னர் 5 W32.blackworm வைரஸ்கள் இருப்பதாக காட்டியது. அவற்றை அழிப்பதற்கு Action->Delete All என்பதைக் கொடுத்தவுடன் எனது அவாஸ்ட் மென்பொருள் முடங்கியது. “Avast Registration Failed” என்று தகவலும் வந்தது.

எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய AppAdmin



கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.

பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்


இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.