flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Nov 5, 2020

வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் "ZOOM" செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்.



‘Zoom’ செயலி பாதுகாப்பானதா?
அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ‘Zoom’ செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘Zoom’ செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் ‘Zoom’ செயலி மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதற்கிடையே ‘Zoom’ செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன.  தரவுகள் சேகரிப்பு குறியாக்கம் (Encryption) பிரச்சினைஉள்ளிட்ட புகார்களும் எழுந்துள் ளன. ‘Zoom’ பயன்பாடு தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.


(Zoom) செயலி என்ன செய்கிறது?

Zoom செயலி வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் சேவை. இதன் மூலம், இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். இணையதளத்தை செயலி வடிவில் பயன்படுத்தலாம்.

அதாவது Zoom  செயலி பயனாளிகளுக்கு இதன் எளிமையே முக்கிய காரணம். எனவே, யார் வேண்டுமானாலும் இதை எளிதாக பயன்படுத்த முடிகிறது. இதன் காரணமாகவே, ஆசிரியர்கள் Online வகுப்பு நடத்த Zoom செயலியை நாடுகின்றனர். நாடகக் கலைஞர்கள் Zoom செயலி மூலம் நாடகம் நடத்துகின்றனர். எழுத்தாளர்கள் ரசிகர்களை சந்திக்கின்றனர். நண்பர்கள் பரஸ்பரம் ஆன்லைனில் சந்திக்கின்றனர்.




No comments:

Post a Comment