அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ‘Zoom’ செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘Zoom’ செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் ‘Zoom’ செயலி மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதற்கிடையே ‘Zoom’ செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. தரவுகள் சேகரிப்பு குறியாக்கம் (Encryption) பிரச்சினைஉள்ளிட்ட புகார்களும் எழுந்துள் ளன. ‘Zoom’ பயன்பாடு தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.