வீடியோ கோப்புகளையும், ஓடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் போர்மட்டில் எளிதாக மாற்றி அமைக்க ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் நீங்கள் ஓடியோ கோப்பை மாற்ற விரும்புகின்றீர்களா அல்லது வீடியோ கோப்பை மாற்ற விரும்புகின்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான ஓப்ஷனை டார்கெட் போர்மெட்டுக்கு மேல் உள்ளதை தெரிவு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்து, தேவையான கோப்பை தெரிவு செய்யுங்கள். வீடியோ கோப்புகளுக்கான போர்மட்டுக்கள் கீழே உள்ளதை கவனியுங்கள். தேவையானதை தெரிவு செய்யுங்கள். எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தெரிவு செய்யுங்கள். இறுதியாக கன்வர்ட் கிளிக் செய்யுங்கள். சில நிமிடங்களில் உங்களுடைய கோப்பு மாற்றப்பட வேண்டிய போர்மட்டுக்கு மாறியிருக்கும். |
No comments:
Post a Comment