கணணிக்கு மிகவும் அவசியமானது மென்பொருள்கள் ஆகும். கணணியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும், சில அதிகப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.
மென்பொருட்கள் இல்லாமல் கணணி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது.
இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.