கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில ஹார்டுவேர் பாகங்களில் கோளாறு என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும். அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைதது நாம் கணனியில் எங்கு சிக்கல் இருக்கிறது என நாமே கண்டுபிடித்து விடலாம்.