
சான் ஏற முழம் சருகும் என்பது போல வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை விட அந்நுட்பங்களை மிக மிக நுட்பமாக நோக்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் அளவும் வன்மை செயல்களின் பெருக்கமும் Jet வேகத்தையே தோற்கடித்துவிடும் போலுள்ளது. இதற்கேற்றாற்போல் அண்மையில் 250000 twitter கணக்குகள் திருடப்பட்டிருந்ததுடன் நேற்று (3/2/2013) எனது சகோதரரின் ebay, yahoo, gmailஆகிய மூன்று கணக்குகளும் ஒரே சந்தர்பத்தில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எமது கணனியின் பாதுகாப்பை பேணுவது முக்கியத்துவம் பெறுகின்றது.