flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jun 19, 2011

கணணிக்கு தீங்கு இழைக்கும் மென்பொருட்களை கண்டு அழிப்பதற்கு


கணணிக்கு மிகவும் அவசியமானது மென்பொருள்கள் ஆகும். கணணியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும், சில அதிகப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

மென்பொருட்கள் இல்லாமல் கணணி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது.
இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.

கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு


நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணணியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில் குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம்.

அவ்வாறு கணணியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.
அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணணியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணணியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணணியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது.

Jun 12, 2011

விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு


 XP திரையை நமக்கு பிடித்த மாதிரி  மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.
இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.

May 22, 2011

அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு



இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன.

ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு போர்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் இல்லாமல் இருக்கலாம். இதற்காக ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அது தான் Format factory 2.60 என்ற மென்பொருளாகும்.

[Team Viewer]- உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.


வீட்டிலிருந்து கொண்டே உங்கள் காரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வை
இந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது.
தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் ரீமோட் டெஸ்க்டொப் போன்ற மற்றுமொரு மென்பொருள் கருவியே டீம் வீவர். (Team Viewer) இது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்பை விட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது
.
டீம் வீவர் மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகலாம்.

May 16, 2011

அதிவேகமாக தரவிறக்கம் (Download) செய்ய சிறந்த மென்பொருள்


நம்முடைய இணைய இணைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்னவென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Chrome, Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி பார்ப்போம்.


Internet download manager (IDM) இந்த மென்பொருள் download செய்யும் போது ஒரு file ஐ உடைத்து (அளவை) பின்னர் அதனை ஒன்று சேர்க்கின்றது இதனால் நாம் முன்னர் download செய்ததைவிட வேகமாக download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் வேறு என்ன வசதிகள் இருக்கு என்று பார்ப்போம்.

May 14, 2011

கணினியை கவனமாக பாதுகாக்க அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.  
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

May 8, 2011

கணினி ஓர் அறிமுகம்


கணினி என்பது எண் முதலான தரவுகளைக் உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.

May 4, 2011

கோப்புகளில் உள்ள கடவுச்சொல்லை நீக்குவதற்கு




சில சமயங்களில் நாம் இணையத் தளத்தில் நமக்கு மிகவும் தேவையான சில கோப்புகளை பதிவிறக்கம் செய்வோம்.
அந்த கோப்பில் நாம் நமக்கு பிடித்த சில மாற்றங்களை செய்யும் பொழுது, அதை செய்ய முடியாத படி அந்த கோப்பிற்கு கடவுச்சொல்லை கொடுத்திருப்பார்கள்.
இப்படி பட்ட சமயத்தில் இந்த மென்பொருள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த மென்பொருளில் அனைத்து வகையான கடவுச்சொற்களையும் இந்த மென்பொருள் மூலம் மிக சுலபமாக நீக்கி விடலாம்.
கீழே உள்ள அனைத்து வகையான கோப்புகளிள் உள்ள கடவுச்சொற்களை இந்த மென்பொருள் உதவியுடன் நாம் எளிதாக நீக்க முடியும்.

May 3, 2011

அலுவலக பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள இலவச Portable Application


கணணி மற்றும் இணைய உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை கணனியில் நிறுவாமல் USB Pendrive போன்றவற்றில் எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் காணப்படும் மென்பொருள்தான் இது. Tiny USB Office எனப்படும் இந்த மென்பொருளானது கணனியில் நிறுவாமல் Portable Application ஆக எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது பிரத்தியேகமாக அலுவலக பாவனைக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.