flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Apr 22, 2017

புதிய வசதியினை வழங்கும் Gmail.


 Gmail நிறுவனமானது புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கணக்கினையும் இணைக்க,

நமது பழைய Gmail கணக்கில் உள்ள அனைத்து மெயில்களையும் புதிய கணக்கிற்கு மாற்றி கொள்ள இயலும்.
பழைய கணக்கிற்கு வரும் மெயில்கள் அனைத்தும் புதிய கணக்கிற்கு அனுப்பப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினை பெற செய்ய வேண்டியவை
புதிதாக தொடங்கப்பட்ட Gmail கணக்கில் சில மாற்றங்களை செய்தாலே போதுமானதாகும்.
முதலில் உங்களின் Gmail கணக்கினை Open செய்து அதில் Settings செல்லவேண்டும்.
Settings-ல் க்ளிக் செய்து Accounts and Import என்பதை தேர்ந்தெடுக்கவேண்டும்.
அதில் Import mail and Contact என்பதை தேர்ந்தெடுத்து அதில் உங்களின் பழைய ஜிமெயில் கணக்கினை கொடுக்க வேண்டும். பின்னர் Continue கொடுக்க வேண்டும்.
பின் Agree கொடுக்கவேண்டும். இதை கொடுத்தவுடன் பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு மெயில்கள் மாற்றப்படுவதற்கான பக்கம் காட்டப்படும்.

Import option வந்தவுடன் Import Contact, Import mail, Import New mail for next 30days ஆகிய மூன்றினையும் தேர்ந்தெடுத்து Start Import கொடுக்க வேண்டும்.
இதை கொடுத்தவுடன் அடுத்த 30 நாட்களுக்கு பழைய மெயிலுக்கு வரும் மெயில்கள் புதிய மெயிலுக்கும் வந்துவிடும்.
பழைய மெயிலினை புதிய மெயிலுடன் இணைக்க செய்ய வேண்டியவை
தொடர்ச்சியாக பழைய மெயிலிருந்து புதிய மெயிலுக்கு தகவல்களை பெறுவதற்கு சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினால் போதும்.
பழைய மெயிலில் Settings சென்று Forwarding and POP/IMAP தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் POP Download பகுதியில் Enable POP for all mail கொடுக்கவேண்டும்.
Save Changes கொடுத்து sign out செய்துவிட்டு புதிய ஜிமெயில் கணக்கில் Settings செல்லவேண்டும்.
அங்கு Accounts and Import என்பதை தேர்ந்தெடுத்து Check email from other accounts-ல் Add an email account என்னும் பக்கத்தில் உங்களது பழைய கணக்கினை கொடுக்கவேண்டும்.

Next கொடுத்து Import emails from my other account (POP3) என்பதை தேர்ந்தெடுத்து மீண்டும் Next கொடுக்க வேண்டும்.
இங்கு உங்கள் கணக்கின் password கொடுக்கவேண்டும். பின் உங்களின் பழைய ஜிமெயிலில் உள்ள அனைத்து மெயில்களையும் delete செய்வதற்கு Leave a copy of retrieved messages on the server-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.

Label incoming messages என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் பழைய மற்றும் புதிய கணக்குகளுக்கு வரும் மெயில்கள் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் தனித்தனியாக சேகரிக்கப்படும்.
இது அனைத்தினையும் தேர்ந்தெடுத்தப்பின்னர் Add Account கொடுக்க வேண்டும். இதன் பின்னர் உங்களின் பழைய கணக்கானது புதிய கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment