flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jul 31, 2011

விண்டோஸ் Driver Update செய்வதற்கு


விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.

Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும்.

புதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர்


VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும்.
நம் விண்டோஸ் கணணியில் டீபால்ட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் அதில் நிறைய வீடியோ போர்மட்டுகள் பார்க்க முடியாது.
அதற்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோகப்படுத்துகிறோம். இதில் பெரும்பாலான போர்மட்டுகளில் வீடியோக்களையும், ஓடியோக்களையும் கண்டு ரசிக்கிறோம்.

வைரஸ்கள் பற்றிய சில தகவல்கள்.


கணணிக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில் பிரச்சனை எத்தகையது என்பதை வரையறை செய்வது தான் கடினமான ஒரு சிக்கலாகும்.

பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன.
ஒரு சிலருடைய கணணிகளில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமையானவையாகவே இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் கணணிகளிலும், மேக் கணணிகளிலும் கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கணணிக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.

பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்


இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் பலவும் ஐஎஸ்ஒ(ISO) போர்மட்டில் மட்டுமே இருக்கும்.

ஐஎஸ்ஒ(ISO) கோப்புக்களை நாம் போர்ட்டபிள் கோப்புக்களாக மாற்றிய பின்பு தான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ கோப்புகளின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் கோப்பாக மாற்றிய பின்புதான் முடியும்.
நேரடியாக ஐஎஸ்ஒ கோப்புக்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும்.

கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளை (Folder) நீக்குவதற்கு


கணணியில் உள்ள தகவல்களை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்து கொள்ள நாம் பெரிதும் பயன்படுத்துவது கோப்பறை(Folder) ஆகும்.

இந்த கோப்பறைகளை நாம் எளிதில் உருவாக்க முடியும். புதிதாக கணணியை பற்றி கற்றுக்கொள்ளும் போது இந்த கோப்பறை உருவாக்கத்தினை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இவ்வாறு உருவாக்கும் கோப்பறைகளை நாம் முறையாக பராமரிப்பது இல்லை. எதற்காக உருவாக்கினோம் என்று கூட தெரியாமல் நம் கணணியில் பல்வேறு கோப்பறைகள் இருக்கும்.
ஆனால் அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் வெற்று கோப்பறைகள் பல நம் கணணியில் இருக்கும். இதனால் நம் கணணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் நாம் எதாவது ஒரு கோப்பினை தேடும் போது ஒவ்வொரு கோப்பறையாகதான் சென்று தேட வேண்டும்.

Jul 2, 2011

விண்டோஸ் ஓபரேடிங் சிஸ்டத்தை லாக் செய்வதற்கு


            கணணி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை சார்ந்தே உள்ளது.
இதற்கு காரணம் கணணி பயனாளர்கள் பெருமளவில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதே காரணம் ஆகும்.
இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்யும் வசதி இல்லை.
பொதுவாக பயனர் கணக்கு துவங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும்.
அந்த கணணியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணணிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணணிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம். சில நேரங்களில் ஓபரேட்டிங் சிஸ்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம்.