flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Mar 26, 2017

கம்ப்யூட்டரை பென் –டிரைவ் மூலமாக லாக் செய்யலாமா?

நமது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற அனைத்திலும் தகவல் சேகரித்து வைத்திருப்போம். அவை திருடு போகாமல் இருப்பதற்காக் பாஸ்வேர்ட்(Pass word) பயன்படுத்தி கம்ப்யூட்டரை லாக்(Lock) செய்திருப்போம்.
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பென்-டிரைவினை(Pen drive) உபயோகித்து நமது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை லாக்(Lock) செய்யவும், அன்லாக்(UnLock) செய்யவும் இயலும்.

இதற்காக Predator என்னும் மென்பொருளினை பயன்படுத்தி பென்-டிரைவ் மூலமாக லாக் மற்றும் அன்லாக் செய்ய இயலும். இதன் மூலமாக மற்றவர்களால் கம்ப்யூட்டரை மற்றவர்களால் பயன்படுத்த இயலாது.
பயன்படுத்தும் முறை
  • முதலில் Predator என்னும் மென்பொருளினை(Software) தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
  • மென்பொருளை தரவிறக்கம் செய்ததும், பென்-டிரைவ் ஐ கம்ப்யூட்டரில் இணைக்கவேண்டும். புதிய பாஸ்வேர்ட்டினை பதிவதற்காக கேட்கும். இதில் பென்-டிரைவில் நாம் பதிந்து வைத்திருக்கும் மற்ற தகவல்களோ அல்லது பைல்களோ அழியாது.
  • அடுத்ததாக, பாஸ்வேர்டை பதிவதற்கான பக்கத்தில் Prefrence Window- Enter new password கொடுக்க வேண்டும். ஒருவேளை பென் –டிரைவ் தொலைந்துவிட்டாலோ அல்லது காரஃப்ட் ஆகி விட்டாலோ இந்த பாஸ்வேர்டானது கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய உதவும். இந்த வசதிக்காக USB Flash Drive –ல் Create key – Ok கொடுக்கவேண்டும்.
  • Predator ஐ தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டும். இதற்கு பின் உங்கள் கம்ப்யூட்டரானது ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் பென் –டிரைவ் உள்ளதா என சரிபார்க்கும். இல்லையெனில் கம்ப்யூட்டர் ஆனது Log off ஆகிவிடும்.
Predator-ல் உள்ள Pause monitoring தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலமாக பென் –டிரைவ் மூலமாக கம்ப்யூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தினால் அறிய இயலும்.

No comments:

Post a Comment