flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Aug 31, 2012

RAM Memory-ன் செயல்பாடுகள்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் Memory and Storage ஆகும்.
இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.
பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

ராம்(RAM: Random Access Memory):
இதனை ஒத்த தொழில்நுட்ப சொற்கள் Memory, Random Access Memory, Short Term Memory, DDR Memory, DDR2 Memory, DDR3 Memory மற்றும் மேலும் சில.
பயன்பாடு:
தற்காலிகமாக புரோகிராம்கள் கையாளும் தகவலினைத் தேக்கி வைக்கவும், மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது.
இதில் பதியப்படும் தகவல்கள்(டேட்டா), புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.
இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும்.
ராம் மெமரி சரியாக இயங்க தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.
எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும்.
DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.

No comments:

Post a Comment