flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jul 20, 2012

MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்


தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும்,  தோன்றும் விண்டோவில் மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.
தெரிவு செய்தவுடன், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, Process என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
அடுத்து வரும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும், மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

No comments:

Post a Comment