flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Jan 21, 2012

Folder களை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு


 கணணியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது.
இதன் பின்னர் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது. இந்த மென்பொருள் மூலம் மறைத்து வைத்த கோப்பறைகளை வேறு எந்த மென்பொருளாலும் திறக்கவே முடியாது.

மேலும் இதை பயன்படுத்தி யூஎஸ்பி டிரைவ்கள், வன்தட்டுகள் போன்றவற்றில் உள்ள கோப்பறைகளை மறைத்து வைக்க முடியும்.
இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இதனை ஓபன் செய்ததும், தோன்றும் விண்டோவில் நீங்கள் மறைக்க வேண்டிய கோப்பறைகளை டிராக் செய்து Hide Folder , Hide Files என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
இதன் பின் உங்களது கோப்பறையை எந்த ஒரு மென்பொருளாலும் ஓபன் செய்ய முடியாது. உங்களது தகவல்கள் பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment