flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sep 12, 2011

Post titleகணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு

இன்றைய இணைய உலகில் கணணி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
ஒரு சின்ன மென்பொருளின் மூலம் நம் கணணியின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணணியின் அனைத்து தகவல்களும் அதில் வந்து விடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும். இதில் 18 விதமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நமது கணணியில் உள்ள டிரைவ்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். சிபியு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இன்புட் டிவைச்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் File, Edit, View, System, Control Panel, Programs, Hardware, Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதன் ஒவ்வொன்றின் மூலமும் கணணியின் எந்தவொரு செயலையும் நீங்கள் எளிதில் அணுக முடியும்.
உதாரணமாக  நீங்கள் Control Panel -Add & Remove ப்ரோகிராம் செல்ல வேண்டுமானால் இதன் மூலமாகவே எளிதில் செல்ல முடியும்.
மேலும் உங்கள் கணணியில் நீங்கள் பொருத்தியுள்ள அனைத்து மென்பொருள் விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். கணணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிக அவசியமான ஒன்றாகும்.
இதன் விவரங்களை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளதால் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment