flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

May 3, 2011

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0


 நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், நிறுவும்போது கீ கேட்டும் அப்போது முந்தைய அப்ஷனை தேர்வு செய்து GetProductkey என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து ரிஜிஸ்டர் செய்தபின் உங்களுக்கான கீயானது உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும், பின் நீங்கள் முழுமையாக இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பார்ட்டிசியனை பார்மெட் மற்றும் டெலிட் செய்து கொள்ளவும் முடியும். வேண்டுமெனில் பார்ட்டிசியன்களை மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளானது NTFS (v1.2, v3.0, v3.1), FAT16, FAT32, Linux Ext2FS, Linux Ext3FS, Linux Swap, HPFS ஆகிய பைல் சிஸ்ட்டங்களை சப்போர்ட் செய்யும். 

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமான Xp,Vista,7 போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். பேக்அப் செய்ய கூடிய டேட்டாவினை ப்ளாஷ் ட்ரைவில் தொடங்கி சிடி/டிவிடிக்களில் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் USB 2.0 வினை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டேட்டாவினை பேக்அப் செய்ய முதலில் Backup என்னும் பட்டியை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும், பின் எந்த ட்ரைவ் என்பதை தேர்வு செய்யவும், பின் டேட்டாவினை எந்த ட்ரைவில் பதிய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும், அடுத்ததாக Finish என்ற பட்டனை அழுத்தவும். கடைசியாக Apply பட்டனை அழுத்தவும். தற்போது பேக்அப் ப்ராசஸ் நடைபெறும் , சிறிது நேரத்தில் முற்றுபெறும். பின் நீங்கள் பேக்அப் செய்த டேட்டாவினை தனியே சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதே போல்தான் ரீஸ்டோரும் செய்ய வேண்டும்.


(2) கணணியை பேக்கப் செய்ய, மீட்க அவசியமான மென்பொருள்
கணணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
திடீரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும்.
மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணணிகளில் வன்தட்டுக்கள் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும்.
20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. Easeus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது.
கணணியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம்(Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது. இது கணணி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.
1. கணணியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட வன்தட்டின் மூலம் மொத்தத்தையும் மீட்க முடியும்.
2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் கோப்பறைகளை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.
3. Incremental Backup: இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப்பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.
4. இதிலிருந்து சீடி, டிவிடி, பென்டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.
5. Backup Schedule: இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.
6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில்(Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.
7. தற்போதைய வன்தட்டில் அனைத்தையும் நகலெடுத்து(Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

ணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ?

டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?

கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,

Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்

இவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.

நீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.

இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.

நன்மைகள் :

1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.
2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
3. இலவச மென்பொருள்.
4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.

No comments:

Post a Comment